பிசிசிஐ எடுத்துள்ள அதிரடி முடிவு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்கனவே மாற்று வீரர்கள் இருக்கும் போது கூடுதலாக நடராஜனும் இருக்கட்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் ஆட இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் இந்த வாரம் 17ம் திகதி தொடங்க உள்ளது.

இந்த நிலையில் நடராஜன், ஷர்த்துல் தாக்கூர், வாஷிங்க்டன் சுந்தர் மூன்று பேரும் அவுஸ்திரேலியாவில் இருக்கட்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியில் ஏற்கனவே மாற்று வீரர்கள் இருக்கும் போது கூடுதலாக நடராஜன் உட்பட 3 மாற்று வீரர்களை அறிவித்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. ஆம் இந்திய அணியில் இந்த தொடரில் பவுலிங் செய்ய சமி , பும்ரா, சிராஜ் ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களாக களமிறங்க உமேஷ் யாதவ், சைனி இருக்கிறார்.

இவர்கள் டெஸ்ட் போட்டிகளில் சொதப்ப வாய்ப்புள்ளது என்று கோஹ்லி நினைக்கிறார். இதனால்தான் நவ்தீப் சைனிக்கு ஒருநாள் போட்டியில் 2 போட்டிக்கு பின் வாய்ப்பு வழங்கபடவில்லை.

இதன் காரணமாகவே நடராஜன் போன்ற வீரர்கள் அவுஸ்திரேலியாவில் இருக்கட்டும் என பிசிசிஐ தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Sharing is caring!