பிரபல கிரிக்கெட் வீரர் ஹாஷிம் ஆம்லா ஓய்வு பெற்றார்

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி வீரர் ஹாஷிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

36 வயதான ஆம்லா, 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 28 சதங்களுடன் 9,282 ரன்கள் குவித்துள்ளார். 181 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 27 சதங்களுடன் 8,113 ரன்கள் சேர்த்துள்ளார்.

தென்னாபிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, அணிக்கு நல்ல பங்களிப்பை கொடுத்து வந்த ஆம்லா, மூன்று வடிவிலான சர்வதேச போட்டிகளில் சாதனைகளை புரிந்துள்ளார்.

Sharing is caring!