பி.சி.சி.ஐ. தலைவராக இன்று பொறுப்பேற்றார் சௌரவ் கங்குலி..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பி.சி.சி.ஐ.) புதிய தலைவராக முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுள்ளார்.

மும்பையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வரும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்திலேயே போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட கங்குலி, தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன், செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பதவி ஏற்றுக்கொண்டனர்.மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் தம்பி அருண்துமால் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பொருளாளராகவும், கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜோர்ஜ் இணைச் செயலாளராகவும், மஹிம் வர்மா துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

Sharing is caring!