புதிய உலக சாதனை படைத்தது அமெரிக்கா….

பிரான்ஸில் நடைபெறும் மகளிருக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் அமெரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது.

தாய்லாந்துக்கு எதிரான ஒரு லீக் போட்டியில் அமெரிக்கா 13 கோல்களைப் போட்டுள்ளது.

சர்வதேச ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடர்களில் 13 கோல்கள் போடப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

முதல் பாதியில் 3 கோல்களையும் இரண்டாம் பாதியில் எஞ்சிய 10 கோல்களையும் அமெரிக்கா போட்டுள்ளது.

அமெரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனையான Alex Morgan இந்தப்போட்டியில் 5 கோல்களை போட்டார்.

இதற்கு 1991 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க வீராங்கனையான மிச்செல் அலெக்‌ஷ், சைனிஸ் தாய்பெய் அணிக்கு எதிராக போட்ட 5 கோல்கள் சாதனையை​ 28 வருடங்களின் பின்னர் Alex Morgan சமப்படுத்தினார்.

தாய்லாந்து வீராங்கனைகளால் போட்டி முழுவதும் கோலடிக்க முடியவில்லை.

சர்வதேச ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடர்களில் 13 கோல்கள் போடப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன் புதிய உலக சாதனையாகவும் இது பதிவானது.

Sharing is caring!