புதிய சாதனையுடன் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

ஜகார்த்தா:
ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். நீரஜ் சோப்ரா 88.03 மீட்டர் துாரம் எறிந்து முதன்முறையாக தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.

பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நீனா வராகி 6.51 மீட்டர் தாண்டி வெள்ளிபதக்கம் வென்றார். இந்தியா 8 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலம் என 41 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!