புதிய சாதனை… ரொனால்டோ புதிய சாதனை செய்து அசத்தல்

மாஸ்கோ:
புதிய சாதனை… ரொனால்டோ புதிய சாதனை செய்து அசத்தி உள்ளார். என்ன விஷயம் தெரியுங்களா?

ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்றைய லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், மொராக்கோ அணிகள் விளையாடின.

மொராக்கோவை 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வீழ்த்தியது. போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ 4-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் ரொனால்டோ 152 சர்வதேச போட்டிகளில் 85 கோல் அடித்து, அதிக கோல்கள் அடித்த ஐரோப்பிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!