புதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் நிரல்படுத்தலில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க 21ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதன்படி அவர் 592 புள்ளிகளை ஈட்டியுள்ளார்.

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் புதிய நிரல்படுத்தலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் லசித் மாலிங்க 4 பந்துகளில் தொடர்ச்சியாக 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இந்த ஆற்றலுக்கு அமைவாக அவர் 21 இடங்கள் முன்னேறியுள்ளார்.

இந்தத் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீட் கான் 780 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர்களான இமாட் வஸீம் மற்றும் சடாப் கான் ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

Sharing is caring!