பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஒரு மாதமாக ரஷ்யாவில் நடந்து முடிந்தது. பைனலில் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று பிரான்ஸ் இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.

2022ல் அடுத்த உலகக் கோப்பை கத்தாரிலும், 2026ல் அமெரிக்காவிலும் நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 8வது மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் 2019ல் பிரான்ஸில் நடக்க உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது பிரான்ஸ். 24 நாடுகள் பங்கேற்கும், 8வது மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் பிரான்ஸில் 2019 ஜூன் 7 முதல் ஜூலை 7 வரை நடக்க உள்ளது.ஆனால் இதுவரை இது குறித்து பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படவில்லை.

தற்போது உலக கோப்பையை வென்றுள்ள பிரான்ஸ் நாட்டில் நடக்க உள்ளதால் இந்த முறை பெண்கள் உலக கோப்பையை ஆண்கள் உலக கோப்பைக்கு சமமாக விளம்பரப்படுத்த முன் வந்துள்ளனர்.

போட்டி நடக்க இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் பிபா இந்த முறை மகளிர் கால்பந்து உலகக் கோப்பையை பிரபலப்படுத்தும் நடவடிக்கையை துரிதமாக செய்து வருகிறது. 1991ல் துவங்கி இதுவரை 7 முறை மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளன.

கடைசியாக 2015ல் நடந்த உலகக் கோப்பை உள்பட மூன்று முறை அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. பிரான்ஸ் 2 முறை, நார்வே மற்றும் ஜப்பான் ஒரு முறை கோப்பையை வென்றுள்ளன.

Sharing is caring!