பெண் குழந்தைக்கு தந்தையானார் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் ஹொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளதை தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட விராட் கோலி, தாயும் சேயும் நலமாக உள்ளதாகவும் அனைவரது பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது குழந்தை பிரசவிக்கும் போது மனைவிக்கு துணையாக இருக்க வேண்டும் என கூறி, அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியை முடித்துவிட்டு நாடு திரும்பியிருந்தார்.

விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும் 2017 ஆம் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

Sharing is caring!