பெல்ஜியத்தை பந்தாட நினைக்கும் பிரான்ஸ்: வெற்றியை தக்க வைக்குமா பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து தொடரில் நாளை இரவு 11. 30 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடக்கும் முதல் அரை இறுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் மோத உள்ளன. இரு அணிகளும் சரியான பலத்தில் இருப்பதால் இந்தப் போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கும். 1998ல் உலகக் கோப்பையை வென்றுள்ள பிரான்ஸ், 6வது முறையாக அரை இறுதிக்கு நுழைந்துள்ளது.

15வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் விளையாடியது.

இந்த உலக கோப்பையில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என போராடி வென்றது.

பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்று வென்றது.

டென்மார்க்குடன் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. நாக் அவுட் சுற்றில், கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 4-3 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

5வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் பிரான்ஸ், கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. 2006ல் பைனலில் விளையாடியது.

இந்த நிலையில் நாளை பெல்ஜியம் அணியுடன் மோதுகிறது. நாக்-அவுட் சுற்று போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, ஹியூகோ லோரிஸ் தலைமையிலான பிரான்ஸ் அணியை எதிர்கொண்டபோது அர்ஜென்டினாவின் கேப்டன் மெஸ்ஸி மீது அதிக கவனம் இருந்த இந்த ஆட்டம், கிலியனை என்றுமே நினைவில் வைத்திருக்கும் ஆட்டமாக அமைந்துவிட்டது. அந்த அளவிற்கு கிலியன் மிகச் சிறந்த ஆட்டத்தை அளித்தார்.

19 வயதான கிலியன் நாளையும் மிகச் சிறந்த ஆட்டத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெல்ஜியம், 13வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. 1986க்குப் பிறகு இரண்டாவது முறையாக அரை இறுதிக்கு நுழைந்துள்ளது.

கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் வியைாடியது பெல்ஜியம். இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்ற மூன்று அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ளது.

பனாமாவை 3-0, துனீஷியாவை 5-2, இங்கிலாந்தை 1-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 3-2 என ஜப்பானை வென்றது. 1986ல் அரை இறுதிக்குள் நுழைந்த பெல்ஜியம், 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரை இறுதிக்கு நுழைந்து அசத்தியுள்ளது.அரை இறுதியில் பிரான்ஸை சந்திக்க உள்ளது. இந்த அணியின் நட்சத்திர வீரர் லுகாகு மிரட்டலான ஆட்டத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளும் சரிசம பலத்தில் இருக்கிறது. வெற்றி பெற வெறித்தனமாக பயிற்சி எடுத்து வருகிறது பெல்ஜியம்.

அதே வேளையில் பல்வேறு வியூகங்கள் அமைத்துள்ளது பிரான்ஸ்.

Sharing is caring!