போட்டி ரத்து!!

இந்தியா, கென்யா அணிகள் மோத இருந்த உலக கோப்பை (19 வயது) பயிற்சி போட்டி மழையால் ரத்தானது.

நியூசிலாந்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை துவங்குகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன.

இதற்கான இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்தியா, கென்யா அணிகள் மோத இருந்தன. கிறைஸ்ட்சர்ச் நகரில் நடக்க இருந்த இப்போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசாமல் ரத்தானது. முன்னதாக முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, 189 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

பிரதான சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வரும் 14ல் சந்திக்கிறது. அதன்பின் பப்புவா நியூ கினியா (ஜன. 16), ஜிம்பாப்வே (ஜன. 19) அணிகளுடன் விளையாட உள்ளது.

Sharing is caring!