பொதுத் தேர்தல் நடந்தாலும் ஐபிஎல் போட்டி இந்தியாவில்தான்

புதுடில்லி:
பொதுத் தேர்தல் நடந்தாலும் ஐபிஎல் டி 20 போட்டி இந்தியாவில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன் முடிந்துள்ளது. 12-வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர் தென்ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படுகிறது என்று தகவல் வெளியானது. ஆனால் போட்டிகளை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முயற்சி செய்து வந்தது.

இது குறித்து உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு தலைவரான வினோத் ராய் டில்லியில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் 23ம் தேதி தொடங்குகிறது. போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஐபிஎல் தொடர் தென்ஆப்பிரிக்காவிலும், 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!