போட்டியில் தோற்றதற்கு உலக அளவில் இவரை கொண்டாடிய இளைஞர்கள்! ஏன் தெரியுமா..?

எது நேர்மை? அப்படி இருந்து மட்டும் என்ன லாபம் என நினைத்து, நேர்மையின் பலன் கண்ணுக்கு தெரியாத காரணத்தால் பலர் அதனை துட்சமாக நினைக்கின்றனர். உண்மையில் நேர்மையின் பலன் எப்படி இருக்கும் என காண விளைவோருக்கு இந்த பதிவு.

விளையாட்டு வீரர் ஒருவரின் நேர்மை. மேற்க்கண்ட படத்தில் முதலில் வரும் வெள்ளைநிற ஆடை அணிந்துள்ளவர் கென்யாவை சேர்ந்த ஆபேல், இரண்டாவதாக வருபவர் ஸ்பெயினை சேர்ந்த ஐவன் பெர்னான்டேஸ். ஆபேல் வெற்றி கோட்டுக்கு மிக அருகில் வந்துவிட்டோம் என நினைத்து தனது வேகத்தை குறைத்து கொண்டு அங்கேயே நிற்கிறார்.

பின்னாடி வரும் வீரர் ஐவன், ஸ்பெயின் மொழியில் ‘ஓடு ஓடு வெற்றி கோட்டிற்கு இன்னும் கொஞ்ச தூரம் ஓடணும் என கத்துகிறார்’. கென்ய வீரர் ஆபேலுக்கு இந்த மொழி புரியாத காரணத்தால், புரியாமல் அங்கேயே நிற்க, பின்னால் ஓடிவரும் ஐவன் ஆபேலை முன்னுக்கு தள்ளி வெற்றி கோட்டை கடக்க வைக்கிறார்.

இதனை அடுத்து பத்திரிகையாளர்கள், ஐவனிடன் நீங்க ஏன் வாய்ப்பு கிடைத்தும் முதலில் வரவில்லை, ஏன் ஆபேலை முன்னுக்கு தள்ளி விட்டீர்கள் என கேள்விகேட்க, அதற்கு ஐவனின் பதில் பிரமிப்படைய செய்தது. ஆபேல் சிறந்த வீரர், வெற்றி கோட்டை கடந்துவிட்டோமா என்ற குழப்பத்தில் இருந்த அவரை ஏமாற்றி நான் முன்னுக்கு செல்வது சரியல்ல! அப்படி வெற்றி பெற்றிருந்தால் அது என்னுடையது ஆகாது என அவர் கூறியுள்ளார்.

விளையாட்டு துறை மட்டுமின்றி வெற்றி பெற தில்லுமுல்லு திருட்டுத்தனம் செய்யும் பலதரப்பட்ட துறைகளில், வெற்றி பெற வாய்ப்பு கிடைத்தும் தவற விட்ட ஐவன் பெர்னான்டேஸ் போன்ற விளையாட்டு வீரரை இங்குள்ளோர் முட்டாள் என ஒரு வார்த்தையில் கூறினாலும், இந்த் செயல் மூலம் தனது நாட்டின் பெருமையை எங்கேயோ பெரும் உயரத்தில் நிறுத்திவிட்டார் ஐவன். இந்த நிகழ்வு ஸ்பெயின் மட்டுமின்றி பல நாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. அந்த விளையாட்டில் வெற்றி பெற்றிருந்தால் கூட, ஐவன் இத்துனை பிரபலம் அடைந்திருக்க மாட்டார். நேர்மையின் பலன்!

Sharing is caring!