போதும் நிறுத்திக்குங்க… முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு ஜடேஜா நோஸ்கட் !

உலகக்கோப்பைக்கான  இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குறித்து, முன்னாள் மூத்த வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நேற்று கருத்து தெரிவித்திருந்தார்.

அப்போது அவர், “ரவீந்திர ஜடேஜா போன்ற சாதாரண வீரர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நான் இருந்திருந்தால், உலகக்கோப்பைக்கான அணியில் ஜடேஜாவை தேர்வு செய்ய அனுமதித்திருக்கமாட்டேன்” என தெரிவித்திருந்தார்.

மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்துக்கு ஜடேஜா இன்று பதிலடி கொடுத்துள்ளார். அதில், ” உங்களைவிட (மஞ்ச்ரேக்கர்) நான் இருமடங்கு அதிகமாக போட்டிகளில் விளையாடியுள்ளேன். இன்னும் விளையாடியும் வருகிறேன். எனவே, சாதித்தவர்களை மதிக்க முதலில் நீங்கள் கற்று கொள்ளுங்கள்” என ஜடேஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.

Sharing is caring!