மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஐலண்டை வீழ்த்தியது எஸ்.எல்.எப்!

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 20 ஆம் நாள் சுற்று போட்டி நேற்று திங்கட்கிழமை (09) இரவு 7.45 மணியளவில் மின் ஒளியில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

‘மன்னார் பிரிமீயர் லீக்’ தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த போட்டி இடம் பெற்றது.

ஐலன்ட் அணிக்கும், எஸ்.எல்.எப் அணிக்குமிடையில் போட்டி இடம் பெற்றது.

இதன் போது எஸ்.எல்.எப் வீரர் ஜேம்ஸ் எடிசன் பிகிராடோ ஒரு கோலை அடித்தார்.

மேலதிக கோல்கள் எதுவும் இரு அணிகளாலும் அடிக்கப்படவில்லை.

எஸ்.எல்.எப் அணி 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Sharing is caring!