மரியா ஷரபோவா டென்னிஸில் இருந்து ஓய்வு

பிரபல ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா யாரும் எதிர்பாராத நிலையில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இவர் ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

2016-ல் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடிய காலத்தில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி, 2 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் வந்த மரியா ஷரபோவா, தற்போது தன் 32 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2004இல் விம்பிள்டனில், அப்போது உச்சத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி உலகை அசர வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Sharing is caring!