மருந்து வகைகள் சிலவற்றின் விலை குறைப்பு

27 மருந்து வகைகளின் விலைகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனூடாக, நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகளின் விலைகளும் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் விலைக் கட்டுப்பாட்டுக்குழுவின் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தத் திட்டத்தின் கீழ், 27 மருந்துகளின் விலை 25 முதல் 30 வீதம் வரை குறைக்கப்படும் என வைத்தியர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

Sharing is caring!