மாணவர்களுக்கு ஆதரவாக பேசிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்..!!

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து திரையுலக முன்னணி பிரபலங்கள் பலரும் கருத்து சொல்லாமல் மெளனம் காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இது தொடர்பில் இந்திய அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா டுவிட்டரில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் காட்சிகள் மனதை வேதனையடைய செய்கிறது.

என் கண்களில் கண்ணீர் வருகிறது, அவர்களும் நம்மில் ஒருவர் தான், மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம்.

அவர்களின் குரலை ஒடுக்க நினைத்தால் நாடு சிறப்படையாது.

அப்படி செய்தால் அது அவர்களை நாட்டை எதிர்த்து தான் திசைத்திருப்பும் என பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!