மாவட்ட சவால் கிண்ண டென்னிஸ் சமர்

மட்டக்களப்பு மாவட்ட சவால் கிண்ண டென்னிஸ் சமர் நேற்று (27) நடைபெற்றது.

மட்டக்களப்பு டென்னிஸ் சம்மேளன மைதானத்தில் நடைபெற்ற தொடரில், 2 குழுக்களின் கீழ் போட்டிகள் நடாத்தப்பட்டன.

30 வயதுக்கு மேற்பட்டோரும் 30 வயதுக்கு கீழானோரும் இந்தத் தொடரில் பங்கேற்றனர்.

16 வீரர்களின் பங்குபற்றுதலோடு போட்டிகள் நடாத்தப்பட்டன.

5 சுற்றுக்களாக நடத்தப்பட்ட போட்டித்தொடரில், 3 – 2 என்ற கணக்கில் 30 வயதுக்கு மேற்பட்டோர் அணி வெற்றியீட்டி சம்பியனானது.

Sharing is caring!