மிகவும் சிறப்பான நாள்… எப்போதும் நினைவில் இருக்கும்: சிலிர்க்கும் தமிழக வீரர்

பிரிஸ்பேன் டெஸ்டில் சிறப்பாக விளையாடியுள்ள தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், இது மிகவும் சிறப்பான நாள், எப்போதும் நினைவில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் என்ற மோசமான நிலையில் இருந்தது.

7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் – ஷர்துல் தாகூர் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடி 123 ஓட்டங்கள் குவித்தது. தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் 62 ஓட்டங்கள் விளாசினார். தனது ஆட்டம் குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில்,

என்மேல் அன்பு வைத்திருந்த, பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எனக்கு மிகவும் சிறப்பான நாள். நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Sharing is caring!