மீண்டும் களமிறங்கும் சச்சின்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டும் வகையில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கோர்ட்னி வால்ஸ் ஆகியோர்  பயிற்சியாளராக செயல்பட உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத் தீயால் மில்லியன் கணக்கிலான ஹெக்டேர் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.நெருப்பை அணைக்க ஆஸ்திரேலியாவின் தீயணைப்புப்படை மொத்தமும் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் இன்னமும் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. தீயை அணைக்கும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயில் இதுவரை 3000 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகி உள்ளன. இதுவரை 50 கோடிக்கும் அதிகமான வன விலங்குகள் கருகி உயிரிழந்துள்ளன அவ்வப்போது மழை பெய்தாலும், காட்டுத்தீயை முழுவதும் அணைக்க முடியவில்லை.இந்நிலையில் நடத்தப்படும் கிரிக்கெட்போட்டி மூலம் திரட்டப்படும் நிதி ஆஸ்திரேலிய செஞ்சிலுவை பேரிடர் நிவாரண நிதிக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் இந்த நட்சத்திர அணிகளின் கேப்டன்களாக செயல்பட உள்ளநிலையில், போட்டி வரும் பிப்.8ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அணிகளில் ஓய்வு பெற்ற வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஜஸ்டின் லேங்கர்,மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சன் மற்றும் அலெக்ஸ் பிளாக்வெல் போன்றவர்களும் இந்த போட்டியில் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.

Sharing is caring!