முடிந்தது நாக் அவுட் கால் இறுதி முதல் ஆட்டத்தில் உருகுவே – பிரான்ஸ்

உலக கோப்பை கால்பந்து தொடரில் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தது. அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரோஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகிய 16அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடின.

இதில் வெற்றி பெற்று தற்போது உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரோஷியா, இங்கிலாந்து, சுவீடன் ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு வந்துள்ளன. இந்த நிலையில் வரும் 6ம் தேதி நோவ்கோராட் மைதானத்தில் உருகுவே, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

Sharing is caring!