முதலாவது ஒருநாள் போட்டி…தென்னாபிரிக்க மகளிர் வெற்றி

இலங்கை மகளிர் அணிக்கும் தென் ஆபிரிக்க மகளிர் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் தென்னாபிரிக்க மகளிர் அணி வெற்றியீட்டியது.

சீரற்ற வானிலை காரணமாக போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டதுடன், ஓவர்களும் 48 ஆக குறைப்பதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென்னாபிரிக்க மகளிர் அணி, 48 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆண்ட்ரூ ஸ்டெயின் 75 ஓட்டங்களை பெற்றதுடன் டென் வான் டெர் நெக்கே 102 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் ஓசதி ரணசிங்க 3 விக்கெட்களையும் உதேஷிகா பிரபோதனி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

226 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 218 ஓட்டகளை மாத்திரமெ பெற்றுக்கொண்டது.

சசிகலா சிறிவர்தன 49 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் பிரசாதினி வீரகோன் 47 பெற்றுக்கொண்டனர்.

நிலக் ஷி டி சில்வா ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் மசாபடா கிலாஸ் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

Sharing is caring!