முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள்… வெஸ்ட் இண்டீஸ் வெல்டன் தொடக்கம் !

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, வெஸ்ட்இண்டீஸ் அணி அசத்தலான துவக்கத்தை தந்துள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில், பகலிரவு போட்டியாக நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேட்பன் ஜாசன் ஹோல்டர் தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

ஆட்டத்தின் முதல் ஓவரை இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் வீசினார். அவர் வீசிய முதல் பந்திலேயே நியூசிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் மாட்டின் குப்டில் எல்பிடபள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து, முதல் ஓவரின் ஐந்து பந்திலேயே மற்றொரு துவக்க ஆட்டக்காரரான கொலின் முன்ரோவும் “க்ளீன் போல்ட்”டாகி பெவிலியன் திரும்பினார்.

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரையும், தான் வீசிய முதல் ஓவரிலேயே டக் -அவுட் செய்து வெளியேற்றியதை, காட்ரெல் தமக்கே உரித்தான பாணியில், ராணுவ வீரர் போல மைதானத்தில் மார்ச்சிங் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Sharing is caring!