முதல் டெஸ்டில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்
அடிலெய்டு:
இந்திய அணி முதல் டெஸ்டில் திணறி வருகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் இழந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று (டிச. 6) அடிலெய்டு நகரில் துவங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்..
இதையடுத்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S