முதல் நாள் ஆட்டம் முடிவு

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

வெலிங்டனில் நடைபெறும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றத்தை எதிர்நோக்கியது.

முதல் 3 விக்கெட்களும் 9 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

தனுஸ்க குணதிலக்க குசல் மென்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் நான்கிற்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பொறுமையுடன் விளையாடிய அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஜோடி நான்காவது விக்கெட்டிற்காக பெறுமதியான 133 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

திமுத் கருணாரத்ன டெஸ்ட் அரங்கில் 21 ஆவது அரைச்சதத்தை எட்டிய நிலையில், 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் அரங்கில் ஒன்பதாவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

எனினும், அவர் துரதிர்ஸ்டவசமாக 83 ஓட்டங்களை பெற்ற நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் தினேஸ் சந்திமால் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

டிம் சய்தி 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

Sharing is caring!