முதல் முறையாக உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற நிலையில் பிரித்தானிய மகாராணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து பல ஆண்டுகளாக உலகக்கோப்பையை வெல்லாமல் இருந்த நிலையில் அந்த ஏக்கம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இங்கிலாந்து வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டு பற்றி அதிகம் பேசாத பிரித்தானிய மகாராணி எலிசபெத் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

அதில், மகாராணியும், இளவரசர் பிலிப்பும் திரில்லிங்கான வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு தங்கள் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!