முத்தரப்பு தொடரிலிருந்து அசேல விலகல்!

இலங்கையில் நடைபெறும் சுதந்திரக் கிண்ண ரி-20 முத்தரப்பு தொடரில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்ன விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்மையில் பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற கிரிக்கெட் தொடரின்போது அசேல குணரத்னவின் தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே இத்தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவும் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்புக் காரணமாக இந்தத் தொடரில் விளையாட மாட்டாரென இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

ரி-20 முத்தரப்புத் தொடர் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!