முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பு

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் செளகான் உயிரிழந்துள்ளார்.

சேதன் செளகானுக்கு கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் லக்னெளவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதன்பிறகு குருகிராம் பகுதியில் உள்ள வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் அவருக்கு சிறுநீரகம் செயலிழந்ததால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட், 7 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

72 வயது சேதன் உத்தரப் பிரதேச மாநில அமைச்சராகவும் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!