முன்னேறியது… காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி

புவனேஸ்வர்:
முன்னேறியது… முன்னேறியது… காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி.

உலக கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. லீக் போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்தது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதன் ‘சி’ பிரிவு லீக் போட்டியில் உலகின் ‘நம்பர்-5’ இந்திய அணி, 11வது இடத்தில் உள்ள கனடாவை எதிர்கொண்டது.

அபாரமாக ஆடிய இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் லலித் உபத்யாய் 2 கோலடித்தார். ஹர்மன்பிரீத் சிங், சிங்லன்சனா, அமித் ரோஹிதாஸ் தலா ஒரு கோலடித்தனர்.

‘சி’ பிரிவில் 3 போட்டியில் 2 வெற்றி, ஒரு ‘டிரா’ என 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இந்தியா நேரடியாக காலிறுதிக்குள் நுழைந்தது. பெல்ஜியம், கனடா அணிகள் ‘கிராஸ் ஓவர்’ போட்டிக்கு தகுதி பெற்றன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!