முரளிதரன் தொடர்பில் லசித் மாலிங்க தெரிவித்த கருத்து!

பிரபல்யம் என்பது ஆட்சி செய்வதற்கான தகைமையல்ல, பிரபல்யம் என்பது மக்களின் விருப்பமாகும், எனினும் ஆட்சி என்பது நிர்வாகமாகும், நிர்வாகத்திற்கும் பிரபல்யத்திற்குமிடையில் வித்தியாசம் உள்ளது, அந்த வித்தியாசத்தை நான் அறிந்துள்ளேன் என இலங்கை கிரிக்கெட் அணி வீரர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து கிரிக்கெட் வீரர்களும் தற்போது அரசியல்வாதிகளாக மாறுகின்றனர், பாகிஸ்தானிலும் அவ்வாறே நடந்தது, நீங்களும் பிரபலமானவர் உங்களுக்கு அரசியல் எண்ணமில்லையா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் முரளி தொடர்புபட்டமை தொடர்பில் ஏதேனும் கருத்துள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு கிரிக்கெட் தொடர்பிலேயே தெரியும், கிரிக்கெட் தொடர்பில் ஏதேனும் என்னிடம் வினாவினால் என்னால் பதிலளிக்க முடியும்.

அது முரளியின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கக்கூடும், வியத்மக குறித்து நீங்கள் கூறும்வரை எனக்கு என்னவென்று தெரியாது, முரளி சேர்ந்திருந்தால் அது தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

Sharing is caring!