மூன்றாவது டெஸ்ட் போட்டியில் திடீரென களமிறங்கிய உள்ளூர் வீரர்!

இந்தியா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியானது இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரராக ஷபாஸ் நதீம் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை.

இருப்பினும் இந்த போட்டியில் அவர் அணியில் அறிமுக வீரராக களமிறங்கி உள்ளார். இந்த போட்டியில் மூன்றாவது ஸ்பின்னராக இணைக்கப்பட்ட குல்தீப் யாதவ் உடற்தகுதி பெறாத நிலையில், அவருக்கு பதிலாக உள்ளூர் ஆட்டக்காரரான ஷபாஸ் நதீம் திடீரென அழைக்கப்பட்டு, அவருக்கு இன்ப அதிர்ச்சியை இந்திய அணி நிர்வாகம் கொடுத்துள்ளது.

Sharing is caring!