மெஸ்ஸி, கிறிஸ்டியன் எரிக்சனை முடக்கியது போல இங்கிலாந்து வீரர் ஹாரி கேனை முடக்க உள்ளோம்: குரோஷியா கோச் தடாலடி

உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என குரோஷியா அணியின் கோச் மற்றும் கேப்டன் பகீர் பேட்டி கொடுத்திருப்பது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. உலக கோப்பை தொடரில் இன்று இரவு 11. 30 மணிக்கு மாஸ்கோவிலுள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் இங்கிலாந்தும் குரோஷியாவும் மோதுகிறது.

டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரோஷியா அணி ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் வென்றுள்ளது. லீக் சுற்றில் நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது.

நாக் அவுட்டில் டென்மார்க்கை 3-2 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது.

காலிறுதியில் ரஷ்யாவை 4-3 என பெனால்டிஷூட்டில் வென்றது.

நான்காவது முறையாக உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ள குரோஷியா, 2வது முறையாக அரை இறுதியில் விளையாட இருக்கிறது. இந்த அணியின் மிகப்பெரிய பலமே , இதுவரை 2 கோல் அடித்துள்ள கேப்டன் லூக்கா மோட்ரிச்சும், இவான் ராகிடிச்சும் மிகச் சிறந்த வீரர்கள் என்பதை விட இந்த அணியில் உள்ள அனைவரும் கோலடித்து அசத்தும் வீரர்களாக இருக்கிறார்கள்.

தற்போதுவரை இந்த அணி மோதிய ஆட்டங்களில் இந்த அணியிலுள்ள 8 வீரர்கள் கோல் அடித்து நிரூபணம் செய்துள்ளனர். இந்த அணியின் கோச் ஸலாட்கோ டலிக் கூறியதை நாம் கவனமாக பார்க்க வேண்டும்.

கடந்த 6 நாட்களில் நாங்கள் அதிக ஆற்றலை செலவிட்டு உள்ளோம். இரு ஆட்டங்களுக்காக மட்டும் 240 நிமிடங்கள் செலவழித்துள்ளோம்.

இது நிச்சயமாக எங்கள் வீரர்களுக்கு பிரச்னையாக இருக்கும். எனினும் மீண்டு வருவதற்கான எல்லாவற்றையும் செய்யத்தயாராகி விட்டோம். இங்கிலாந்து அணியுடன் மோத புதிய ஆற்றலுடன் சக்தியும் உள்ளது. எங்களது நோக்கமே கோப்பையை நோக்கிதான் உள்ளது.

மேலும் இங்கிலாந்து அணியின் ஹாரி கேனை நாங்கள் மதிக்கிறோம். இந்தத் தொடரில் அவர் 6 கோல்கள் அடித்துள்ளார்.

அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி, டென்மார்க்கின் கிறிஸ்ட்டியன் எரிக்சன் ஆகியோரை நாங்கள் செயல்படவிடாமல் தடுத்தோம். அதே பாணியில் ஹாரி கேனை முடக்குவோம் என்று கூறியுள்ளார்.

இந்த அணியின் கேப்டன் மேட்ரிக் கூறுகையில், இந்த தருணத்திற்காக நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தோம்.

அது இப்போது எங்களது அருகில் உள்ளது. மிக அருகில் சென்ற பிறகு களைப்பு, அயர்வு, வலி எதுவும் எங்கள் கண்களுக்கு தெரியவில்லை.

எங்களது இலக்கை நாங்கள் அடைவதற்கு எங்களது கடைசி சொட்டு வியர்வை களத்தில் சிந்தும் வரை போராடுவோம். அதே சமயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் மிக கடுமையானதாக இருக்கும்.

சுவீடன், இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தை நாங்கள் பார்த்தோம். அதில் இங்கிலாந்து அணி கடைசி நேரத்தில் பந்தை கையாண்ட விதத்தை பார்த்தோம்.

ஆகையால் அதில் ஒரு வியூகம் வைத்துள்ளோம் என அவர்களது கனவு குறித்தும் உழைப்பு, விடா முயற்சி குறித்தும் பேசியுள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என குரோஷியா அணியின் கோச் மற்றும் கேப்டன் பகீர் பேட்டி கொடுத்திருப்பது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

Sharing is caring!