மேக்ஸ்வெல்லுக்கு திருமணம்; அதுவும் இந்திய வம்சாவளி பெண்ணோடு..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆதிரடி ஆட்டக்காரரான கிளன் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினு ராமன் என்கிற பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி, உலகளவிலான கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்தவர் கிளம் மேக்ஸ்வெல். ஐபிஎல் தொடரில் கிங்க்ஸ் லெவல் பஞ்சாப் அணிக்காக விளையாடி இந்தியாவிலும் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார்.அண்மையில் இவர், தனக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக கூறி, சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு வேண்டும் என கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டின் பிக்பாஷ் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார் மேக்ஸ்வெல்.

தற்போது இவருக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணான வினு ராமன் என்பவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக இவர்கள் மூன்று ஆண்டுகள் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வீரர் மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினு ராமனுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வினு ராம தனது இடது கையை உயர்த்தி விரலில் மோதிரம் இருப்பது போல காட்டியுள்ளார். இதனாலேயே இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.கிளன் மேக்ஸ்வெல்லின் காதலியாக அறியப்படும் வினு ராமனின் பெற்றோர்கள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். குறிப்பாக அவர்கள் இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வினு ராமன் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் ஆஸ்திரேலியா தான்.

Sharing is caring!