மேசைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணிகள் வெற்றி

ஆசிய சம்பியன்ஷிப் மேசைப்பந்தாட்டத் தொடரில் துர்க்மேனிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை ஆடவர் அணி வெற்றியீட்டியுள்ளது.

ஆசிய சம்பியன்ஷிப் மேசைப்பந்தாட்டத் தொடர் இந்தோனேஷியாவில் நடைபெறுகிறது.

இதில் ஆடவர் பிரிவு தரப்படுத்தல் போட்டியொன்றில் இலங்கை மற்றும் துர்க்மேனிஸ்தான் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் 3 – 0 என்ற சுற்றுக்கள் கணக்கில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.

ரொஹான் சிறிசேன, சுபுன் வருசவிதான, சமீர கினிகே ஆகியோர் இந்தத் தொடரில் இலங்கை ஆடவர் அணியை பிரதிநித்துவப்படுத்துகின்றனர்.

இலங்கை ஆடவர் அணி தனது அடுத்த போட்டியில் மொங்கோலியாவை சந்திக்கவுள்ளது.

இதேவேளை, இந்தத் தொடரின் மகளிர் பிரிவு தரப்படுத்தல் போட்டியொன்றில் இலங்கை மற்றும் மொங்கோலிய அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் 3 – 1 என்ற சுற்றுக்கள் கணக்கில் இலங்கை மகளிர் அணி வெற்றியீட்டியுள்ளது.

இந்த வெற்றியுடன் தொடரில் இலங்கை அணி 15 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

Sharing is caring!