மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் அணியின் வீரர் லஹிரு திரிமன்னவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், ஏனைய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், இருநாட்டு கிரிக்கெட் சபைகளின் பேச்சுவார்தைகளின் அடிப்படையில் மாற்று திகதியின் மூலம் இந்த தொடர் நடைபெறலாம்.

எதிர்வரும் 18ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இலங்கை அணி, அங்கு சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் விளையாடவிருந்தது.

Sharing is caring!