மைதானத்திலே சுருண்டு விழுந்து இறந்த கிரிக்கட் வீரர்

கொல்கத்தாவை சேர்ந்த வெறும் 22 வயதான இளம் கிரிக்கெட் வீரர் மைதானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தாவின் பெங்கால் கிரிக்கெட் சங்கம் நடத்தி வரும் பலிகுங்கே விளையாட்டு க்ளப்பிற்காக விளையாடி வந்தவர் சோனு யாதவ். 22 வயதான இவர் நேற்று நடந்த நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடி உள்ளார். பாடா க்ளப் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் அவர் பேட்டிங்  செய்த பிறகு டிரெசிங் அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் வழியிலேயே மரணித்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Sharing is caring!