மைதானத்தில் கொட்டாவி… பாகிஸ்தான் கேப்டனை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில், இந்தியாவும், பாகிஸ்தானும் பலபரீட்சை நடத்தி வருகின்றன.

முன்னதாக, இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 46.4 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. சுமார் அரை மணிநேர இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

அப்போது, பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ஃப்ராஸ் அகமது மைதானத்தில் கீப்பிங் செய்தபடியே, கொட்டாவி விட்டு கொண்டிருந்தார். அவரது அனிச்சையான இந்தச்  செயலை நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு கலாய்த்து வருகின்றனர். அந்த கலாய்ப்புகளில் சில சாம்பிள்கள்:

, இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் சர்ஃப்ராஸ் எந்த அளவுக்கு உற்சாகமாக பங்கேற்றுள்ளார் என்பதை அவரது கொட்டாவி தெளிவாக உணர்த்துகிறது.

ஆட்டம் தனது கைவிட்டு போனதாக, சர்ஃப்ராஸ் நினைத்துவிட்டார் என்பதே அவரது கொட்டாவி சொல்லும் செய்தி.

அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நமக்கு வரும் கொட்டாவியை சர்ஃப்ராஸ் இன்று நினைவுப்படுத்திவிட்டார்  என, இவ்வாறு பலவிதமாக நெட்டிசன்கள் அவரை  கலாய்த்து வருகின்றனர்.

Sharing is caring!