யாருக்கும் முத்தம் கொடுக்க கூடாது! ஐபிஎல் போட்டிக்கு கிளம்பிய தமிழக வீரர் அஸ்வினுக்கு மனைவி போட்ட உத்தரவு

ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இந்திய அணியை சேர்ந்த தமிழக வீரர் அஸ்வின் கிளம்பும் முன்னர் அவர் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அவருக்கு அறிவுரைகள் கூறியுள்ளனர்.

2020 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் துவங்க இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு, லாக்டவுன் காரணமாக அந்த தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.

அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் வீரர்களை ஒன்று திரட்டி தனி விமானத்தில் ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பி வருகின்றன. டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஆட உள்ள அஸ்வினும் சென்றுள்ளார். அவர் சென்னையில் இருந்து கிளம்பும் முன் அவருக்கு வீட்டில் அதிகமான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன.

அஸ்வினின் இரண்டு மகள்களும் வெளிநாடு கிளம்பும் அஸ்வினுக்கு முகக் கவசம் அணிந்து கொண்டே பாடம் நடத்தி உள்ளனர். முதலில் யாரையும் கட்டி அணைக்கக் கூடாது என அவரது மகள்கள் கூற, சரி என தலையாட்டினார் அஸ்வின்.

அதன் பின் என்ன? என அஸ்வினின் மனைவி ப்ரீத்தி கேட்க, அவரது மகள்கள் அவ்வளவு தான் என்கிறார்கள்.

ஆனாலும், விடாத ப்ரீத்தி யாரையும் முத்தம் பண்ணக் கூடாது என அஸ்வினுக்கு உத்தரவு போட்டுள்ளார்.

Sharing is caring!