யாழில் விளையாடுவதற்கு வந்த இடத்தில் திருமலை வீரர்கள் செய்த மனிதாபிமான செயல்…!! குவியும் பாராட்டுக்கள்…!

தமிழ் ஈழத்தின் தலைநகராம் திருகோணமலை மாவட்டத்தை
பிரதிநிதித்துவப்படுத்தி NEPL  உதைபந்தாட்டத் தொடரிலே ”Trinco Titans”‘ அணியானது பங்குபற்றிவருவது விளையாட்டு ரசிகர்கள் அறிந்த விடயமாகும்.

அண்மையிலே துரையப்பா விளையாட்டு மைதானத்தில் வல்வை FC அணியுடன் மோதுவதற்காக வருகைதந்த குறித்த அணியினர் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், பின்பு அவர்கள் செய்த அரும்பணியினால் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளனர்.போட்டி முடிந்த பின் அணி வீரர்கள், உத்தியோகத்தர்கள் சகிதம் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்குச் சென்று, அங்கு சிரமதானம் மற்றும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டதோடு, நோயாளர்களையும் பார்த்து ஆறுதல் படுத்தியுள்ளார்கள்.

விளையாட வந்தவர்களின் இந்த மனிதநேயத்தை நாமனைவரும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். இதுபோல் எம் மனங்களையும் மாற்ற வேண்டும். பிரதேச பாகுபாடு வேற்றுமை குரோதம் களைந்த ஒற்றுமை மேம்பட்ட மனநிலை தோன்றி மனிதாபிமானம் மேலோங்க வேண்டும். இனி வரும் காலங்களில் இப்படியான செயற்பாடுகளூடாக ஐக்கியத்தை கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே விளையாட்டின் ஊடாக நாம் சமுகத்துக்கு செய்யும் பெரும் நன்மையாக அமையும். உதைபந்தாட்ட போட்டிகள் வரையறுக்கப்பட்ட மைதானத்திற்குள் வரையறுக்கப்பட்ட விதிகளிற்கமைவாக வரையறுக்கப்பட்ட நேரகாலத்திற்குள் தொடங்கி முடிவது அப்போது மட்டுமே நாம் எதிர் எதிர் வீரர்கள். ஆனால் எதிர், எதிர் மனிதர்கள் அல்ல என்பதை நினைவுபடுத்தி, சகோதரர்களாக சகோதரத்துவமுடைய மன நிலையுடன் இவ்வாறான சேவைகளை வளர்க்க வேண்டியது இளம் சமுதாயத்திற்கு ஆரோக்கியமான ஒன்றே.”’Trinco Titans” அணி வீரர்களே, நிர்வாகத்தினரே… நீங்கள் தோற்றாலும் ஜெயித்தாலும் 2019ஆண்டின் NEPL  போட்டியின் சம்பியன் நீங்களே…!

வாழ்த்துக்கள்…. உங்களது அபரிதமான சிந்தனைகளுக்கும் நற் செயற்பாடுகளுக்கும்.

Sharing is caring!