யாழில் 40 km சைக்கிள் ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது…

யாழ்ப்பாணம் சுதுமலை தெற்கு அம்பாள சனசமூக நிலையம், விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு மாகாண ரீதியாக நடத்தப்பட்ட ஆண்களுக்கான 40 கிலோ மீற்றர் சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று இடம் பெற்றது.

இதில் நவாலியைச் சேர்ந்த பா.பிரணுவதாஸ் முதலாம் இடத்தையும், நவாலியைச் சேர்ந்த செ. றஜீபன் இரண்டாம் இடத்தையும், கல்வியங்காட்டைச் சேர்ந்த இரா. டீபன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

Sharing is caring!