யாழ் கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நனவாகின்றது..

யாழ் மண்ணிற்கு பெருமை தேடித் தந்து, மாபெரும் LPL – Lanka Premier League போட்டிகளில் Jaffna Stallions  அணியில் இன்று அறிமுகமாகும் வியாஸ்காந்த்.

லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் களமிறங்கும் பலம் பொருந்திய அணிகளில் ஒன்றாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் காணப்படுகின்றது. இலங்கையின் பிரதான நகரங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவராக திசர பெரேரா செயற்படுகின்றார்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் புதிய வரலாற்றை படைத்து யாழின் முதல் Colombo Kingsர் Colombo Kings இற்கு எதிராக இன்று களமிறங்கியுள்ளார்.அந்த 11வது பெயரைப் பார்க்க எத்தனையோ பேர் ஆவலுடன் இருந்தோம். இதோ அந்த தருணம்..இக் கனவை நனவாக்கிய சகல நல்லுள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

வியஸ்காந்த் வலது கை சுழற்பந்து வீச்சாளரும் சகலதுறை ஆட்டக்காரர் யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் அணித் தலைவரும் ஸ்ரீலங்கா U-19 அணிக்காக விளையாடியுள்ளார்.இந்த ஊர்க்குருவி சிறகை விரித்து பறக்க இருக்கிறது. விரைவில் இதுவும் பருந்தாகும். என்கிற நம்பிக்கையில்.இலங்கையின் பல நடராஜன்கள் கண்ட கனவு இன்று வியாஸ்காந்த் வடிவில் நனவாகிறது.

காத்திருப்பு, ஏக்கம், அவமானம் என பலவற்றினை கடந்து மிக முக்கியமான மைல்கல்லை யாழ் அணியான Jaffna Stallions வழியாக எட்டிப்பிடித்திருக்கிறார்.இந்த ஊர்க்குருவி சிறகை விரித்து பறக்க இருக்கிறது. விரைவில் இதுவும் பருந்தாகும்.வாழ்த்துகள் விஜயகாந்த் வியாஸ்காந்த்.

Sharing is caring!