யுஎஸ் ஓபன்…செரினா வெற்றி…ஹாலேப் வெளியேற்றம்

யு.எஸ் ஓபன் டென்னிஸ் துவக்க போட்டியிலேயே நம்பர் ஒன் வீராங்கனை ரோமானியாவின் சிமோனா ஹாலேப் தோல்வி அடைந்து வெளியேறினார்.

நியூயார்க் நகரத்தில் யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு துவக்க ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஹாலேப், 44-வது இடம் வகிக்கும் எஸ்டோனியாவின் கைய கனேபியை எதிர்கொண்டார். போட்டியில் ஹாலேப்புக்கு சவால் விடும் வகையில் சிறப்பாக செயல்பட்ட கனேபி, 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் தோல்வி கண்டு வெளியேறினார்.

துவக்க போட்டியில் நேர்செட் கணக்கில் ஹாலேப் தோல்வி அடைவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு மரியா ஷரபோவாவிடம், துவக்க போட்டியிலேயே ஹாலேப் தோற்கடிக்கப்பட்டார்.

மற்றொரு போட்டியில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 6-4, 6-0 என போலந்து வீராங்கனை மக்தா லினெட்டை தோற்கடித்து, 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.

Sharing is caring!