ராகுல் – மனிஷ் பாண்டே பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 165 ரன்கள் குவித்தது

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் மனிஷ் பாண்டேவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 165 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது T20 கிரிக்கெட் போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பந்து வீச நியூஸிலாந்து அணி முடிவெடுத்தது.

இந்த போட்டியில் நியூஸிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், மற்றும் இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் முகமத் ஷம்மி ஆகியோர் விளையாடவில்லை. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் எட்டு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்குப்பின் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தெடர்ந்து வந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரரான ராகுல் 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் இடைநிலை ஆட்டக்காரரான மனிஷ் பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி ஐம்பது ரன்கள் எடுத்தார். இந்திய அணி தனது இருபது ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

நியூஸிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான சோதி அதிகபட்சமாக மூன்று விக்கெட்கள் எடுத்தார்.

Sharing is caring!