ரெய்னா இல்லாமல் முதன்முறையாக வங்கதேச டி20 போட்டியை எதிர்கொள்ளும் இந்திய அணி!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் விவரம் நேற்றைக்கு முன்தினம் அறிவிக்கப்பட்டது.

டி20 தொடரில் விராட் கோலிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் சர்மாவிற்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை கோலி வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய அணி இதுவரை வங்கதேச அணியுடன் 8 முறை டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த போட்டிகள் அனைத்திலுமே இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் முதன்முறையாக தற்போது செல்லவிருக்கும் இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பெறவில்லை.

78 டி20 போட்டியில் விளையாடி உள்ள ரெய்னா ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் விளாசி 1605 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக அவர் 2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!