ரேட்டிங்கில் இந்திய அணி நீடிக்குமா?… ரசிகர்கள் எதிர்பார்ப்பு

புதுடில்லி:
முதலிடத்தில் இந்திய அணி நீடிக்குமா… நீடிக்குமா என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதலில் நடந்த டி 20 போட்டி 1-1 என்று சமன் ஆனது. இதையடுத்து நாளை 6ம் தேதி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. தற்போது இந்திய அணி டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளது. இந்த  தொடரை ஆஸ்திரேலியா 4-0 என வென்றால் ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறும்.

இந்தியா 3வது இடத்துக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்படும். அதே நேரத்தில் இந்தியா ஒரே ஒரு போட்டியை டிரா செய்தால் கூட  முதலிடத்திலேயே நீடிக்கும். இந்தியா நம்பர் 1 இடத்திலேயே நீடிக்கும்.

இந்தியா 4-0 என வெல்லும் பட்சத்தில் அது 120 புள்ளிகள் பெறும். ஆஸ்திரேலியா புள்ளிகள் 97 ஆக குறையும்.  ஆஸ்திரேலியா 3-0 என வென்றால் 109 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கும் முன்னேறலாம்.

3-1 என வென்றால் ஆஸ்திரேலியா 107 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இங்கிலாந்து 2வது இடம், இந்தியா 111 புள்ளிகளாக குறைந்து 1வது இடத்தில் நீடிக்கும். இந்த தொடரில் எப்படி விளையாடினாலும் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி, ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்து கேன் வில்லியம்சன் முறையே 1,2,3 இடங்களில் நீடிப்பார்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!