ரோஹித் ஷர்மாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை

அணியின் உப தலைவர் ரோஹித் ஷர்மாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என, இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லிக்கும் உப தலைவர் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாக ஊடகங்களில செய்திகள் வௌியாகியிருந்தன.

இந்நிலையில், நேற்று மும்பையில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெரிவித்துள்ளார்.

தாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ரோஹித் ஷர்மாவின் திறமைகளைப் பாராட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை என சுட்டிக்காட்டிய விராட் கோஹ்லி, அணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!