ரோஹித் ஷர்மா, விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தல்!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி அரைசதம் அடித்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மவுன்ட் மனுக்கனுயி நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியில், நியூசிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது.

இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ஷிகர் தவான் 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, ரோஹித்துடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார் 22.4 ஓவரில் ரோஹித் சர்மா தனது அரைசதத்தை கடந்தார். அதேபோன்று விராட் கோலி, 26.1 ஓவரில் 60 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

தற்போது இந்தியா 28 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

 

Sharing is caring!