லங்கன் பிரீமியர் லீக்கிற்கு அனுமதி!

லங்கன் பிரீமியர் லீக்கிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியுடனான நேற்றைய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து போட்டிகளிற்கான அனுமதி கிடைத்துள்து.

இப்போட்டி நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.

இந்த போட்டிக்கு வரும் வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னர் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியிருந்த நிலையில், வீரர்கள் இப்போது ஏழு நாட்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவார்கள். பின்னர் அவர்கள் பயிற்சி குழாமில் இணையலாம்.

எல்பிஎல் போட்டி தொடரின் ஆரம்ப திகதியில் மாற்றங்கள் வரலாம். அல்லது அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டு, சூரியவெவ மைதானத்தில் மட்டுமே அனைத்து போட்டிகளையும் நடத்தவும் வாய்ப்புள்ளது.

எனினும், முன்னர் திட்டமிட்டபடி நவம்பர் 27ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 17 அன்று முடிவடையவும் விளையாட்டுத்துறை அமைச்சு எதிர்பார்க்கிறது. இந்த தொடரில் 23 போட்டிகள் நடக்கும்.

Sharing is caring!