லங்கா பிரீமியர் லீக்கில் இருந்து ஐந்து வெளிநாட்டு வீரர்கள் விலகல்!

லங்கா பிரீமியர் லீக்கில் (எல்பிஎல்) இருந்து ஐந்து வெளிநாட்டு வீரர்கள் விலகியுள்ளனர். அவர்களை அணிகளின் உரிமையாளர்கள் வாங்கிய ஒரு வாரத்திற்குள் அணிகளிலிருந்து விலகியுள்ளனர்

ஆண்ட்ரே ரஸ்ஸல், ஃபொஃப் டு பிளெசிஸ், டேவிட் மில்லர், டேவிட் மாலன், மன்வீந்தர் பிஸ்லா ஆகியோரே விலகியுள்ளனர்.

மில்லர், டு பிளெசிஸ் மற்றும் டேவிட் மாலன் ஆகியோர் தென்னாபிரிக்கா-இங்கிலாந்து தொடரிற்காக லங்கா பிரிமியர் லீக்கில் இருந்து விலகியுள்ளனர். நவம்பர் 27ஆம் திகதி தென்னாபிரிக்கா-இங்கிலாந்து தொடர் ஆரம்பிக்கிறது.

ரஸ்ஸல் காயம் காரணமாக வெளியேறிவிட்டதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

போட்டிகளில் இருந்து வெளியேறும் ஐந்தாவது வீரர் மன்வீந்தர் பிஸ்லா தெளிவான காரணமெதையும் தெரிவிக்கையில்லையென கூறப்படுகிறது.

எல்பிஎல் நவம்பர் 21 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடக்கவுள்ளது.

Sharing is caring!